இண்டர்நெட் சேவை நிறுவனங்கள் சரியான வேகத்தை தருகிறதா?



தற்போதைய டெக்னாலஜி உலகில் இண்டர்நெட் சேவை தரும் நிறுவனங்கள், இண்டர்நெட் வேகத்தை கற்பனைக்கும் எட்டாத வகையில் அதிகரித்து கொண்டே செல்கின்றனர். ஸ்மார்ட்போன்களில் தற்போது குறைந்த பட்சமாக 5Mbps வேகத்திலும் அதிகபட்சமாக 12 Mbps வேகத்திலும் இண்டர்நெட் சேவையை தருகின்றன. அதே டெக்ஸ்டாப்பில் என்றால் 50 முதல் 150Mbps வேகம் வரை கிடைக்கலாம்



ஆனால் அதே நேரத்தில் இந்த நிறுவனங்கள் உறுதியளிக்கும் வேகத்தை தருகின்றனவா என்பதை என்றைக்காவது சோதனை செய்து பார்த்திருக்கின்றீர்களா? இல்லையென்றால் பரவாயில்லை, இனிமேல் சோதனை செய்து பாருங்கள், எப்படி சோதனை செய்வது என்பதற்கு நாங்கள் உதவுகிறோம் இந்த வேக சோதனை செய்து பார்ப்பதற்கு முன்னர் இண்டர்நெட்டின் வேகம் குறைவதற்கான சில காரணங்களை பார்ப்போம் ஹார்ட்வேர் பிரச்சனைகள்: உங்களது கம்ப்யூட்டரில் பழைய ரூட்டர் இருந்தால் தற்போதைய அதிவேக வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது. அல்லது மோசமான அம்சங்கள் உள்ள வைஃபை இருந்தாலும் இண்டர்நெட் வேகம் குறைய காரணமாக அமையும் தூரம் எவ்வளவு: உங்களது இண்டர்நெட் சேவை நிறுவனம் மிக அருகில் இருந்தால் நல்ல வேகமும் தூரம் அதிகமாக அதிகமாக குறைந்த வேகமும் இருக்கும் நெரிசல்: ஒரே நேரத்தில் பலர் இண்டர்நெட்டை உபயோகித்து கொண்டிருந்தாலும் இண்டர்நெட்டின் வேகம் குறைய ஆரம்பிக்கலாம். டிராஃபிக்: இண்டர்நெட் டிராபிக் மிக அதிகமாக இருக்கும்போது உங்களது இண்டர்நெட் சேவை நிறுவனம் வேகத்தை குறைக்க முயற்சிக்கலாம். அப்போது உங்களது இண்டர்நெட் வேகம் குறைய ஆரம்பிக்கும்

இண்டர்நெட் வேகத்தை எப்படி தெரிந்து கொள்வது? 

Speedtest.net இந்த இணையதளத்தின் மூலம் மிக எளிதாக நம்முடைய இண்டர்நெட் வேகத்தை அறிந்து கொள்ளலாம். இந்த இணையதளத்தை ஓப்பன் செய்தவுடன் 'பிகின்' என்று இருக்கும் இடத்தில் க்ளிக் செய்தால் போதும். உடனே உங்கள் திரையில் பிங், டவுன்லோடு ஸ்பீட் மற்றும் அப்லோட் ஸ்பீட் ஆகிய மூன்று விபரங்களை தெரிந்து கொள்ளலாம்


ZDNet ஸ்பீட் டெஸ்ட்: இந்த இணையதளத்தின் மூலமும் மிக எளிதாக இண்டர்நெட்டின் வேகத்தை தெரிந்து கொள்ளலாம். உங்களுடைய இண்டர்நெட் வேகத்தை தெரிந்து கொள்வது மட்டுமின்றி சர்வதேச இண்டர்நெட் குறித்த விபரங்கள் மற்றும் எந்தெந்த நாட்டில் எந்த அளவுக்கு இண்டர்நெட் வேகம் உள்ளது என்ற விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்

Speedof.Me இந்த இணையதளம் மிகத்துல்லியமாக இண்டர்நெட் வேகத்தை காண்பிக்கும் இணையதளங்களில் ஒன்று. எந்தெந்த நேரங்களில் எவ்வளவு வேகத்தில் இண்டர்நெட் செயல்படுகிறது. டிராபிக் அதிகமாக உள்ள நேரத்தில் எந்த வேகத்தில் செயல்படுகிறது போன்ற விபரங்களையும் இதில் அறிந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுடைய இண்டர்நெட்டின் வேகம் காண்பிக்கப்படவில்லை என்றால் உங்களுடைய ரூட்டரை அப்கிரேட் செய்தால் பிரச்சனை சரியாகிவிடும்

No comments:

Powered by Blogger.