24 எம்.பி செல்ஃபி கேமரா வசதியுடன் வீவோ வி 7 பிளஸ் அறிமுகம்


சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான வீவோ, தனது அடுத்த புதிய செஃல்பி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சீன மொபைல் உற்பத்தி நிறுவனமான வீவோ 24 எம்.பி செல்ஃபி கேமரா வசதியுடன் கூடிய வீவோ வி 7 பிளஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வீவோ நிறுவனம் வி7 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் 24 எம்.பி மூன்லைட் செல்ஃபி கேமராவ வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. சீன நிறுவனம் வெளியிட்டுள்ள 24 எம்.பி செல்ஃபி கேமரா வசதியுடன் கூடிய வி 7 பிளஸ் உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

விலை:

ரூ.19,999 விலை கொண்ட ஓப்போ எஃப் 3 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக வீவோ நிறுவனம் வி 7 பிள்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.21,990 ஆகும். மேட் பிளாஸ் மற்றும் கோல்டு கலரிலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. வாடிக்கையாளர் வரும் 15ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், இந்த புதிய மொபைலை பெறுவதற்கு இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவும், நேரடியாக கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்:

⦁ 5.99 இன்ச் எச்டி உடன் கூடிய டிஸ்ப்ளே வசதி (720x1440 பிகசல்கள்)
⦁ இந்த டிஸ்ப்ளே வசதியுடன் கொரில்லா கண்ணாடி 3 கொண்ட பாதுகாப்பு ஸ்க்ராட்ச் கார்டு இடம்பெறுகிறது.
⦁ 24 எம்பி முன்பக்க கேமரா வசதியுடன் கூடிய யுஎஸ்பி.
⦁ எல் இ டி பிளாஷ் உடன் கூடிய 16 எம்.பி பின்பக்க கேமரா.
⦁ கேமரா ஃபேஸ் பியூட்டி 7.0 மற்றும் போர்ட்ரேட் பயன்முறை போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.
⦁ வீவோ நிறுவனத்தின் யுஐ 3.2 தொடுதிறன் வசதி கூடிய ஆண்ட்ராய்டு 7.1 நௌகாட் ஆபரேட்டிங் சிஸ்டம்.
⦁ ஆக்டா கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 450 பிராசசர் உடன் கூடிய 4ஜிபி ரேம்.
⦁ 64 ஜிபி உள்பக்க சேமிப்பு வசதியுடன் மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலமாக 256 ஜிபி வரையிலும் சேமிக்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
⦁ 3,225 எம்.ஏ.எச் பேட்டரி திறன் மற்றும் 4ஜி எல்டிஇ, வை-பை, புளூடுத், எஃப் ரேடியோ, யுஎஸ்பி கேபிள் வசதியும் உள்ளது.

No comments:

Powered by Blogger.