ரூ.5 க்கு 4ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் பெறுவது எவ்வாறு ?

techtipstamil

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து ஜியோ வழங்கும் சலுகையின் காரணமாக ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் 5 ரூபாய்க்கு 4ஜிபி  3ஜி/4ஜி டேட்டாவை அனைத்து ஏர்டெல் ப்ரீபெயட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்குகின்றது.
ஏர்டெல் 4ஜி ஆஃபர்

சமீபத்தில் ஏர்டல் நிறுவனம் ரூ.8 முதல் ரூ.399 வரையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் அறிமுகம் செய்துள்ள நிலையில் கூடுதலாக ஒரு சலுகையை ஏர்டெல் ப்ரீபெய் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

2ஜி மற்றும் 3ஜி சேவையை பெற்று வரும் ஏர்டெல் பயனாளர்கள் 4ஜி சேவைக்கு மாறினால் மட்டுமே இந்த சிறப்பு சலுகையை பெறலாம். 2ஜி அல்லது 3ஜி சேவை பெற்று வரும் பயனாளர்கள் 4ஜி சேவைக்கு மாறும்போது முதல் ரீசார்ஜ் ரூ.5 மேற்கொண்டால் 4ஜிபி டேட்டாவை ஏர்டெல் வழங்குகின்றது.

4ஜிபி டேட்டா பெறுவது எவ்வாறு ?

1. 2ஜி அல்லது 3ஜி சேவை பெறும் பயனாளர்கள் 4ஜி சேவைக்கு மாற வேண்டும்.

2. ரூ. 5 கொண்டு முதல் ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் 4ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

3. இந்த 4ஜிபி டேட்டா 7 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.

4. ஒருமுறை மட்டுமே இந்த சிறப்பு டேட்டா ஆஃபர் கிடைக்கப் பெறும்.


இதுதவிர மற்றொரு பிளானை ரூ. 8 கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் நாடு முழுவதும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவன எண்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

No comments:

Powered by Blogger.