ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் வாட்ஸ்அப் செயலில் வர்த்தகரீதியான நடவடிக்கைகளை முதற்கட்டமாக தொடங்கியுள்ளது. புக்மைஷோ நிறுவனத்துக்கு இந்தியாவில் வெரிஃபைடு கணக்கினை வழங்கியுள்ளது.
வாட்ஸ்அப் வர்த்தக சேவை
சமீபத்தில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் வர்த்தகரீதியான கணக்குகளுக்கு என சிறப்பு வெரிஃபைடு பேட்ஜ் கொண்டதாகவும், வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பதில் தருவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற கணக்குகளுக்கு அழைப்பு வசதி நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 20 கோடிக்கு மேற்பட்ட பயனாளர்களை பெற்றதாக விளங்கும் வாட்ஸ்அப் இந்தியா மக்களால் பெரிதும் விரும்புகின்ற செயலியாக விளங்கி வருகின்றது.
தொடர்ந்து பல்வேறு சேவைகளை பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் வழங்கி வரும் சூழ்நிலையில்,வணிகரீதியான பயனாளர்களுக்கு என சிறப்பு அம்சங்களை பெற்ற முறையை உருவாக்கியுள்ளது.
No comments: