புளூவேல் கேம் பற்றி 8 சுவாரஸ்யங்கள்

Tech TIps Tamil


நீலத்திமிங்கலம் என்கின்ற புளூவேல் ஆன்லைன் விளையாட்டின் காரணமாக இந்தியாவில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் புளூவேல் ககைம் சுவாரஸ்யங்களை அறிந்து கொள்ளலாம்.

புளூவேல் கேம் சுவாரஸ்யங்கள்

  • இந்த விளையாட்டு 2013 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் தொடர்ந்து பரவி வரும் தற்கொலை கருவியாகும்.
  • புளூவேல் கேம் பெயரின் பின்னணி என்னவென்றால் திமிங்கலம் தானாகவே கரையில் ஒதுங்கி தற்கொலை செய்து கொள்வது போல இந்த விளையாட்டினை விளையாடும் மனிதர்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
  • ரஷ்யாவை சேர்ந்த உளவியல் படித்த 22 வயது மாணவர் உருவாக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
  • 2013 ஆம் ஆண்டில் உருவான இந்த ஆன்லைன் விளையாட்டு முதன்முறையாக VKontakte என்ற சமூக வலைதளத்தின் வாயிலாக பல்வேறு நாடுகளில் பரவதொடங்கியது.
  • இதுதரவிறக்கும் வகையிலான மென்பொருள் அல்லது ஆப் போன்று அல்லாமல் இணையத்தின் உதவியுடன் ஆன்லைனில் விளையாடும் வகையிலான முறையாகும்.
  • 50 விதமான படி நிலைகள் கொண்ட ப்ளூவேல் கேம் 50 நாட்களுக்கு வழங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒரு சேலஞ்ச் வழங்கப்பட்டு அதனை நிறைவு செய்து, அந்த படத்தை அப்லோட் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
  • இந்த விளையாட்டின் நோக்கம் என்னவென்றால் எவ்விதமான நோக்கமும் இல்லாமல் , மதிப்பில்லாமல் உள்ள மனிதர்களை சமூகத்தில் இருந்து சுத்தம் செய்வதற்கு உருவாக்கப்பட்டதாகும்.
  • புளூ வேல் கேம் விளையாடியதால் முதல் தற்கொலை 2015 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
  • 50 படி நிலைகளில் கொண்ட இந்த விளையாட்டில் இறுதி நிலை என்னவென்றால் தற்கொலை செய்த புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும் இதுதான் பலரும் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணமாகும்.


No comments:

Powered by Blogger.