உடலை ஊடுருவி பார்க்க நவீன கேமரா கண்டுபிடிப்பு


Tech Tips Tamil

மருத்துவதுறையில் மிகவும் சவாலான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பெரிதும் உதவியாக உள்ளநிலையில், புதிய கேமரா எண்டோஸ்க்கோப் கண்டறியப்பட்டுள்ளது.
உடலை ஊடுருவும் கேமரா

உடல் உள்ளுருப்புகளில் உள்ள பிரச்சனைகளை மிக எளிதாக கண்டுபிடித்து உடனடியாக அதற்கு ஏற்ற வகையிலான தீர்வினை வழங்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொள்ள இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான விஞ்ஞானி கேவ் தலிவால் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது.

இனி ஸ்கேன், எக்ஸ்-ரே ஆகியவற்றுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள நுட்பத்தில் உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் போன்ற மருத்துவ சாதனங்களை டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த எண்டோஸ்கோப் கருவியை உடலுக்குள் செலுத்திய பிறகு, அதன் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து சரியான இடத்திற்கு கொண்டு செல்ல எக்ஸ்ரே அம்சத்தை நாட வேண்டியுள்ள நிலையில், இதற்கு மாற்றாக கேமரா உதவியுடன், எண்டோஸ்கோப் இருப்பிடத்தை மிகச் சரியாக மருத்தவர்கள் அறிய வேண்டிய இடத்துக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றது. இதற்கு என சிறப்பு முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள சிலிகான் சிப் கேமராவில் பொருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் குழு,  நடைமுறையில் உள்ள உடல்நல சார்ந்த சிக்கல்களை புரிந்து கொள்ள மருத்துவருடன் இணைந்து பணியாற்றும் மேம்பட்ட நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் கோட்பாடுகள் உதவி புரியும் என தெரிவித்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.