இன்ஸ்டாகிராமில் வாடிக்கையாளர் காண்டாக்ட், மின்னஞ்சல்களை அம்பலப்படுத்தும் மால்வேர்



இணையத்தில் யாருக்கும் பாதுகாப்பு கிடையாது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சைபர் குற்றவாளிகளை அதிகம் மேம்பட்டவர்களாக்கியுள்ளது. ரேன்சம்வேர் முதல் செயலிகளில் பிழை வரை ஹேக்கர்கள் வாடிக்கையாளர்களுக்கு தொல்லை தருவது வாடிக்கையாகி விட்டது.



அந்தவகையில் பிரபல புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் செயலியான இன்ஸ்டாகிராம் இணைந்துள்ளது. தற்சமயம் கிடைத்துள்ள தகவலின்படி இந்த சேவையை கொண்டு அதன் வாடிக்கையாளர்களின் காண்டாக்ட்கள் மற்றும் மின்னஞ்சல் சார்ந்த தகவல்களை திருடம் பிழை வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. எனினும் இந்த பிழை கொண்டு பாஸ்வேர்டு மற்றும் இதர இன்ஸ்டாகிராம் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் இந்த பிழை மூலம் எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்களையும் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஒருசிலர் இன்ஸ்டாகிராமில் வாடிக்கையாளர்களின் காண்டாக்ட் தகவல்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை இயக்கும் பிழையை ஏற்படுத்தியுள்ளனர் என இன்ஸ்டாகிராம் தெரிவித்திருந்தது.


இன்ஸ்டாகிராமில் கண்டறியப்பட்ட பிழை உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டதாகவும், தொடர்ந்து இந்த பிரச்சனையை சட்டரீதியாக தீர்க்கும் பணிகளும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் இணை நிறுவனர் மற்றும் சிடிஓ மைக் கிரெய்கர் உறுதி செய்துள்ளார். இத்துடன் இந்த சம்பவத்தை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க அறிக்கை ஒன்றை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளது. அதில் மிகுந்த பாதுகாப்பு வழிமுறைகளை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கின் பாதுகாப்பு தன்மையில் அதிக கவனமுடன் செயல்பட கேட்டுக் கொள்கிறோம். தேவையில்லாத அழைப்புகள், சந்தேகிக்கக்கூடிய வகையில் இருக்கும் குறுந்தகவல்கள் உள்ளிட்டவற்றை பெறும் பட்சத்தில் இது குறித்த தகவல்களை அதற்கான வழிமுறைகளை பயன்படுத்தி தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதை செயல்படுத்த Profile -- Menu -- Report a Problem -- Spam ir Abuse ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர் தகவல்களை பாதுகாப்பது மிகமுக்கிய பணிகளில் ஒன்றாகியுள்ளது, இதற்கென தொடர்ந்து போராடி வருகிறோம். தற்சயம் ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறோம் என கிரெய்கர் தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.