நாடு முழுவதும் உள்ள 5.5 லட்சம் கிராமங்களுக்கு வைஃபை வசதி தரும் திட்டத்தின் ஆயத்தப்பணிகள் மும்மரமாக நடப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியாவின் அங்கமாக டிஜிட்டல் கிராமங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, முதல் கட்டமாக நடப்பு ஆண்னு இறுதிக்குள் ஒரு லட்சம் கிராமங்களில் வைஃபை ஏற்படுத்தித்தரப்படும் என்று தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வினாடிக்கு 1 Gbps என்ற அதிவேகத்தில் இன்டர்நெட் சேவை இதன் மூலம் அளிக்கப்படும். வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் வைஃபை வசதியை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.3,700 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
No comments: