தினமும் 4மணி நேரம் மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தும் இந்தியர்கள்.!



இந்தியாவில் தற்சமயம் ஸ்மார்ட்போன் பயன்பாடு மகவும் அதிகமாக உள்ளது, குறிப்பாக வங்கி முதல் வாகனம் வரை அனைத்திற்க்கும் இந்த ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் கிராமம் முதல் நகரம் வரை இந்த ஆப் பயன்பாடு என்பது மிக அதிகமாக உள்ளது.


தற்போது வெளிவந்துள்ள ஒரு அறிக்கையில் இந்தயர்கள் தினசரி 4 மணி நேரம் ஸ்மார்ட்போன்களில் ஏதாவது ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்துகின்றனர், மேலும் இன்டர்நெட் பயன்பாடு என்பது தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக அதிகமாக  உள்ளது.

ஆப் அன்னி: இந்தியாவில் ஆப் அன்னி என்ற நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதில் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளனர், மேலும் ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பயன்படுத்துபவர்கள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என அறிவிக்கப்பட்டது.

மொபைல் ஆப்: இந்தயர்கள் தினசரி 4மணி நேரம் மொபைல் ஆப் பயன்படுத்துகின்றனர் என்று ஆப் அன்னி என்ற நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டது.


ஒன்றரை மணி நேரம்: இந்தியர்கள் குறைந்தது ஒன்றரை மணி நேரம் மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. மல்டீமீடியா போன்றவற்றின் பயன்பாடு ஸ்மார்ட்போன்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

5மணி நேரம்: தென்கொரியா, மெக்சிகோ, பிரேசில், ஜப்பான் போன்ற நாடுகளில் 5மணி நேரம் ஏதாவது ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகின்றனர்.

No comments:

Powered by Blogger.