பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோவின் சலுகையை வீழ்த்தும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 கட்டணத்தில் 84 நாட்களுக்கு முற்றிலும் இலவசமான வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 1GB டேட்டா ஆகிய சலுகைகளை அளிக்கிறது.
இதற்குப் போட்டியாக பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தடாலடி சலுகைகளை அறிவித்து போட்டியில் நீடித்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஜியோவை வீழ்த்தும் நம்பமுடியாத சலுகையை அறிவித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரூ.429 ரீசார்ஜ் மூலம் 90 நாட்களுக்கு தினசரி 1GB அதிவேக டேட்டா மற்றும் முற்றிலும் இலசவமான வாய்ஸ் கால் ஆகியவற்றை அளிப்பதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
ஜியோவின் 399 சலுகை 84 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கொண்டது என்பதால் வெறும் 30 ரூபாய் கூடுதலாக இருந்தாலும் மேலும் 6 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியுடன் அதே பலன்களை அளிக்கும் பிஎஸ்என்எல் சலுகை வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
No comments: