கமெராவிற்கு முக்கியத்துவம் கொடுத்து அறிமுகமாகும் Huawei Mate 10 கைப்பேசி!


ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்கள் தற்போது கமெராக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.

இதன் காரணமாக டுவல் கமெராக்கள், மெகாபிக்சல்களை அதிகம் கொண்ட கமெராக்கள் என ஸ்மார்ட் கைப்பேசிகளில் தரப்படுகின்றன.

இதேபோலவே Huawei நிறுவனமும் தனது புதிய கைப்பேசியில் கமெராவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.



Huawei Mate 10 எனும் இக் கைப்பேசியானது 6.1 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இதில் Kirin 970 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM என்பனவற்றுடன் 64GB சேமிப்பு நினைவகம், 4,000mAh மின்கலம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இதில் 20 மெகாபிக்சல்கள் மற்றும் 12 மெகாபிக்சல்களை உடைய டுவல் கமெரா தரப்பட்டுள்ளது.

எனினும் இதன் செல்ஃபி கமெரா தொடர்பில் எந்த விதமான தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.


எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியின் விலையானது 1,000 டொலர்கள் ஆகும்.

No comments:

Powered by Blogger.