2018-ல் மொபைல் கட்டணங்கள் வெகுவாக குறையும்: நிபுணர்கள் கருத்து


Tech tips tamil


இந்த ஆண்டைக் காட்டிலும், 2018-ல் மொபைல் சேவை கட்டணங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மொபைல் கட்டணங்கள் குறைந்துள்ளது. அதற்கு தொலைத்தொடர்பு துறையில் அதிகரித்துள்ள போட்டியே காரணமாக கூறப்படுகிறது. 2018-ல் மொபைல் கட்டணங்கள் சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக தொலைத்தொடர்பு துறை நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் அதிக டேட்டா பயன்படுத்தும் பயனாளர்களுக்கு கட்டணம மிகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கடந்த ஆண்டை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த ஆண்டு மொபைல் கட்டணங்கள் சுமார் 25 முதல் 32 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதிக டேட்டா பயன்படுத்தும் பயனாளர்களுக்கு கட்டணம் சுமார் 60 முதல் 70 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் ஜியோவின் இலவச அறிவிப்பே என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆரம்ப காலத்தில் ஜியோ அறிவித்த இலவச டேட்டா சேவைகளும், குறைந்த கட்டணத்தில் அதிக சேவைகள் வழங்கியதுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ராஜாக்களான ஏர்டெல், வோடோஃபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை பெரிதும் குறைத்துள்ளன. கட்டணக்குறைப்பு படிப்படியாக அதிகரித்து, 2018-ல் மொபைல் கட்டணங்கள் வெகுவாக குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

No comments:

Powered by Blogger.