ஆண்ட்ராய்டு - ஆண்ட்ராய்டு ஒன்: இரண்டிற்கும் என்ன வித்தியாசம்


ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னர் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஒன் மீண்டும் சியாமி நிறுவனத்தின் சியாமி மி A1 மாடல் மூலம் இந்தியாவுக்கு ரீஎண்ட்ரி ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு P வரை அப்கிரேட் செய்யும் வகையில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கேமிரா, மி ஸ்டோர் ஷாப்பிங் போர்ட்டல் மற்றும் மி ரிமோட் ஆகிய மூன்று செயலிகள் மட்டுமே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது

ஆண்ட்ராய்டு ஒன் என்றால் என்ன?

கடந்த 2014ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஒன் என்ற புதிய வகையை அறிமுகம் செய்தது. குறைந்த விலையில் நிறைந்த சேவை தரும் வகையில் இந்த ஆண்ட்ராய்டு ஒன் சேவை தொடங்கப்பட்டது மைக்ரோமேக்ஸ், கார்போன், ஸ்பைஸ் மொபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆரம்ப காலகட்டத்தில் இந்த ஆண்ட்ராய்ட் ஒன் மாடல் அடங்கிய ஸ்மார்ட்போன்களை தயாரித்து ரூ.6299 முதல் விற்பனை செய்து வந்தன. இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், இலங்கை, மியான்மர், பிலிப்பைன்ஸ், வங்கதேசம் மற்றும் நேபால் ஆகிய ஆசிய நாடுகளிலும் இந்த ஆண்ட்ராய்டு ஒன் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது

ஆண்ட்ராய்டு-ஆண்ட்ராய்டு ஒன் என்ன வித்தியாசம்

ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள OME என்று கூறப்படும் ஒரிஜினல் எக்யூப்மெண்ட் மேனுஃபேக்சரர் அனைத்தும் ஆண்ட்ராய்டு ஒன் மாடல் ஸ்மார்ட்போன்களிலும் இருக்கும். ஆனால் புதிய ஓஎஸ் அப்டேட் வரும் நேரத்தில் சற்று சிரமமாக இருக்கும் இந்த இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்று பார்த்தால் ஆண்ட்ராய்டு மொபைல் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்றவாறு சரியான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேரை தேர்வு செய்ய முடியும். ஆனால் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் கூகுள் தான் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேரை முடிவு செய்யும். இதனால் விலை குறைவாக கிடைக்கின்றது. சாப்ட்வேர்களை கூகுள் தான் மேனேஜ் செய்வதாக இருப்பினும் அதன் அப்டேட்கலை நெக்சஸ் மற்றும் பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் போல அவைகளே செய்து கொள்ளலாம்

ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் பட்டியல்

சியாமி மி A1 மாடல் தற்போது சமீபத்தில் இந்த பட்டியலில் இணைந்திருந்தாலும் ஏற்கனவே ஆண்ட்ராய்டு ஒன் இருக்கும் மாடல் ஸ்மார்ட்போன் குறித்து பார்ப்போமா! 
  • மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் A1 (Micromax Canvas A1 ) 
  • கார்போன் ஸ்பார்க்கிள் (VKarbonn Sparkle V ) 
  • ஸ்பைஸ் டிரீம் (UNO Spice Dream UNO ) 
  • மைட்டோ இம்பேக்ட் எவர்கிராஸ் ஒன் (AX Mito Impact Evercoss One X ) 
  • நெக்சியன் ஜர்னி ஒன் (Nexian Journey One ) 
  • செர்ரி மொபைல் ஒன் (Cherry Mobile One ) 
  • Q மொபைல் (QMobile A1 ) 
  • செர்ரி மொபைல் ஒன் (Cherry Mobile One ) 
  • மை போன் யூஎன்.ஓ (MyPhone Uno ) 
  • லாவா பிக்சல் (V1 Lava Pixel V1 ) 
  • இன்ஃபின் இக்ஸ் ஹாட் 2 (X510 Infinix Hot 2 X510 ) 
  • இன்ஃபின் இக்ஸ் ஹாட் 2 (X510Infinix Hot 2 X510 ) 
  • Bq அக்யூரிஸ் (Bq Aquaris A4.5 ) 
  • செர்ரி மொபைல் ஒன் (G1 Cherry Mobile One G1 ) 
  • ஐ-மொபைல் (i-mobile IQ II )

No comments:

Powered by Blogger.