ஆண்ட்ராய்ட் ஓரியோவில் வை-ஃபை கோளாறு இருப்பதால் கேஜெட் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பரவலாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களில் பயன்படுத்தப்படுவது கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆண்டராய்ட் இயங்குதளம். இந்த இயங்குதளம் ஆங்கில எழுத்துகளை முதல் எழுத்தாகக் கொண்ட பெயருடன் அறிமுகமாகி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு வெர்ஷனின் பெயரும் உணவுப் பொருள் ஒன்றின் பெயரிலேயே இருக்கும்.
அந்த வகையில் அண்மையில் ஆண்ட்ராய்ட் ஓரியோ (Oreo) அறிமுகமானது. கடந்த மாதம் 21ஆம் தேதி நேர்ந்த சூரிய கிரகணத்தில் இது வெளியிடப்பட்டது.
முதல் கட்டமாக கூகுள் பிக்சஸ் மொபைல்களில் ஓரியோ அப்டேட் கிடைத்துள்ளது. ஆனால், வெளியான சில நாட்களிலேயே தொடர்ந்து புகார் வந்தபடியே உள்ளதாம். ஓரியா இயங்குதளம் கொண்ட மொபைல்களில் வை-ஃபை இயங்கிக்கொண்டிருக்கும் போதும் மொபைல் டேட்டா பறிபோகிறது என்பதுதான் அதிகம் குவியும் புகார்.
வழக்கமாக, வை-ஃகை ஆன் (Wifi ON) செய்யப்பட்டால் மொபைல் டேட்டா செலவழியாது. ஆனால், ஓரியோவில் வை-ஃபை ஆன் செய்தும் பிரயோஜனம் இல்லாமல் மொபைல் டேட்டா பறிபோகிறது என்று பலரும் புலம்புகின்றனர்.
No comments: