ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் வழங்கும் புதிய சலுகைகள்

Tamil Tech Tips


நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. ரூ.8 முதல் ரூ.399 விலையில் பல்வேறு சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் சமீப காலங்களில் அறிவித்துள்ளது. ஏர்டெல் உள்ளிட்ட பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் ஜியோவை எதிர்கொள்ள புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி ஜியோபோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பல்வேறு நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை குறைக்கலாம் என டெலிகாம் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

ஏர்டெல் 399:

ஏர்டெல் ரூ.399 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோவின் ரூ.399 திட்டத்திற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் முன் இந்த திட்டம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஏர்டெல் 349 மற்றும் 149:

ஏர்டெல் ரூ.349 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.149 திட்டத்தில் அன்லிமிட்டெட் ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள் மற்றும் 2 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

மற்ற திட்டங்கள்:

ஏர்டெல் ரூ.8 திட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் நிமிடத்திற்கு 30 பைசா விலையில் 56 நாட்களுக்கு மேற்கொள்ள முடியும். ரூ.40 செலுத்து ரீசார்ஜ் செய்யும் போது ரூ.35 டாக்டைம் மற்றும் அன்லிமிட்டெட் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ரூ.60 திட்டத்தில் ரூ.5 டாக்டைம் மற்றும் அன்லிமிட்டெட் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.  

இதேபோன்று ரூ.5 செலுத்து ரீசார்ஜ் செய்யும் போது 7 நாட்களுக்கு 4ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை 4ஜி சிம் அப்கிரேடு செய்வோருக்கு ஒரு முறை மட்டும் வழங்கப்படுகிறது. ரூ.199 திட்டத்தில் அன்லிமிட்டெட் உள்ளூர் அழைப்புகள், 1ஜிபி 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.  

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜியோ சேவைகள் அறிவிக்கப்பட்டது முதல் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் குறைந்து வருகிறது. இந்த ஆண்டின் ஏப்ரெல் - ஜூன் வரையிலான காலாண்டில் ரூ.367 கோடி வருவாய் ஈட்டிய நிலையில் ஏர்டெல் நிறுவனம் 75 சதவிகித இழப்பை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,462 கோடி லாபம் ஈட்டியது.

No comments:

Powered by Blogger.